லயன் மயூர ராயல் கிங்டம் என்ற அமைப்பு கேரளா திருச்சூரை சேர்ந்த திரு. ரெஜித் குமார் அவர்களால் துவங்கப்பட்டது. இனி வரும் காலக்கட்டங்களில் முருகயுகம் மலர செய்ய வேண்டிய கடமைகளை, தியானத்தின் வாயிலாக திரு. ரெஜித் அவர்களுக்கு, முருகப்பெருமான் உணர்த்தி வருகின்றார். முருகப் பெருமான் உணர்த்தும் தகவல்கள் செவ்வாய் மற்றும் குமரிக்கண்டத்துடன் நெருங்கிய தொடர்புடையது.
லயன் என்பது நரசிம்ம மூர்த்தியை குறிக்கும் (லட்சுமி நரசிம்மர் செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடையவர்). மயூர என்பது முருகப்பெருமானை குறிக்கும் (முருகப்பெருமான் குமரிக்கண்டத்துடன் தொடர்புடையவர்). இது உலகளாவிய அமைப்பு என்பதால், இந்த பெயர் ஆங்கிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
- 1-May-2017 - முருகப்பெருமான் அருளாசியுடன் பழனியில் பூஜை செய்யப்பட்டு, லயன் மயூர ராயல் கிங்டம் (LMRK) அமைப்பு தொடங்கப்பட்டது.
- 9-May-2017 - திரு. ரெஜித் குமார் LMRK அமைப்பின் நோக்கம், முருகப்பெருமான் உணர்த்திய முதல் கடமை குறித்து விவரித்தார். முருகப்பெருமான் பாதத்தை ஒரு மயூரசிம்ஹாசனத்தில் வைத்து, லண்டனில் பிரதிஷ்டை செய்து பூஜை செய்யுமாறு உத்தரவு. இது குறித்த காணொளி: Click here to watch!!!
- 6-Jun-2017 - திரு. ரெஜித் குமார் அவர்கள் ஆஸ்திரேலிய வானொலி நிறுவனமான ATBCயுடன் நேர்காணல். இது குறித்த காணொளி: Click here to watch!!!
- 21-Jun-2017 - திரு. ரெஜித் குமார் மற்றும் LMRK குறித்து வேந்தர் டிவி மூன்றாவது கண் நிகழ்ச்சி ஒளிபரப்பு. இது குறித்த காணொளி: Click here to watch!!!
- 25-Jun-2017 - பிரதி ஞாயிறு 10-10.15 மணி வரை (இந்திய நேரப்படி) சிறப்பு பிரார்த்தனை துவக்கம். உலகெங்கிலும் உள்ள உறுப்பினர்கள், முருகப்பெருமானை தியானித்து "ஓம் சரவணபவாய நமஹ" என மந்திர உச்சாடனம் செய்து பூஜிக்குமாறு திரு. ரெஜித்குமார் அறிவுறுத்தல். இவ்வழிபாடு முருகப் பெருமானின் அருளையும், ஆற்றலையும் பெற உதவும்.
- 15-July-2017 - சஷ்டி தினத்தன்று LMRK இணையதளம் துவக்கம் (www.lionmayura.org)
- 25-July-2017 - LMRK அமைப்பு திருச்சூரில் டிரஸ்ட் ஆக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது.
- 29-July-2017 - முருகப்பெருமானின் வழிகாட்டுதலில் மலேசியா, சிங்கப்பூர் பயணம். மலேசியாவில், பிரிக்பீல்ட்சில் சொற்பொழிவு.
- 30-July-2017 - LMRK மலேசிய அமைப்பு திரு. ரெஜித் குமார் அவர்களால், பத்து மலை - வேலாயுதர் சுவாமி ஆலயத்தில் துவக்கம்.
- 30-July-2017 - திரு. ரெஜித் குமார் அவர்கள் மலேசியா டெங்கிலில் உள்ள மயூர நாதர் ஆலயத்தில் சொற்பொழிவு.
- 1-August-2017 - திரு. ரெஜித் குமார் அவர்கள் மலேசியா செரம்பனில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் சொற்பொழிவு.
- 7-August-2017 - திரு. ரெஜித் குமார் அவர்கள் சிங்கப்பூரில் உள்ள ருத்ரகாளியம்மன் ஆலயத்தில் சொற்பொழிவு.
- 8-August-2017 - சிங்கப்பூர் தாவோயிச அமைப்பின் தலைவர் சுங் குவாங் டாங் அவர்களுடன் திரு. ரெஜித் குமார் சந்திப்பு. பஞ்ச பூத சிவ சக்தியும், தாவோ சக்தியும், ஸ்வஸ்திகா மைய ஆற்றலும் ஒருங்கே அமைந்த மெக்ரிட்சி ரிசர்வாயர் பகுதியின் முக்கியத்துவம் குறித்து விளக்கம்.
- 9-August-2017 - திரு. ரெஜித் குமார் அவர்கள் சிங்கப்பூர் உறுப்பினர்களுடன் மெக்ரிட்சி ரிசர்வாயர் பகுதிக்கு சென்று பூஜை மற்றும் தியானம் மேற்கொள்ளுதல். அன்றைய தினம், "செவ்வாய் தினம்" ஆக அறிவிப்பு.
- 11-August-2017 - சிங்கப்பூர் இந்து அறநிலைய துறை அதிகாரிகளுடன் சந்திப்பு. மெக்ரிட்சி ரிசர்வாயர் பகுதியின் சிறப்பு குறித்து விளக்கம்.
- 30-Sep-2017Lion Mayura Royal Kindom - திரு. ரெஜித் குமார் அவர்கள் சென்னையில் அமைந்துள்ள பாம்பன் சுவாமிகள் சமாதியில் வழிபாடு. திருவான்மியூரில் சொற்பொழிவு, தியானம், ஹீலிங் நிகழ்ச்சி மற்றும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் (சொற்பொழிவின் தொகுப்பு: Click here to view Details).
- 1-Oct-2017 - திரு. ரெஜித் குமார் அவர்கள் வடபழனி சித்தர் ஆலயத்தில் உறுப்பினர்களுடன் தியானம். வடபழனி முருகர் ஆலயத்தில் வழிபாடு மற்றும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்.
- 25-Oct-2017 - திரு. ரெஜித் குமார் அவர்கள் முருகப்பெருமான் வழிகாட்டுதலில் ஆஸ்திரேலிய பயணம். சூரசம்ஹார தினத்தன்று ப்ளூ மௌண்டைன் பகுதியில் சிறப்பு பூஜை (முருகப் பெருமானின் பாதத்தில் சேர்க்க உள்ள தங்கத்தை வைத்து பூஜித்தல்). சூர சம்ஹார தினத்தை குமரிக்கண்ட தினமாக கொண்டாடுமாறு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல்.
- 27-Oct-2017 - துர்க்கை அம்மன் (நியூ சவுத் வேல்ஸ்) ஆலயத்தில் சொற்பொழிவு, தியானம் மற்றும் ஹீலிங் நிகழ்ச்சி
- 28-Oct-2017 - சிட்னி ஐயப்ப சுவாமி நிலையத்தில் சொற்பொழிவு, தியானம் மற்றும் ஹீலிங் நிகழ்ச்சி
- 31-Oct-2017 - ஆஸ்திரேலியாவில் உள்ள காரியங் என்ற சக்திவாய்ந்த பகுதிக்கு சென்று தியானம்
- 1-Nov-2017 - திரு. ரெஜித் குமார் அவர்கள் ஆஸ்திரேலியாவை சேர்ந்த "தாயகம்" வானொலி நிலையத்துடன் நேர்காணல். இது குறித்த காணொளி: Click here to watch!!!
- 9-Nov-2017 - திரு. ரெஜித் குமார் அவர்கள் சிங்கப்பூரில் உள்ள ருத்ரகாளியம்மன் ஆலயத்தில் சொற்பொழிவு.
- 11-Nov-2017 - திரு. ரெஜித் குமார் அவர்கள் சிங்கப்பூர் உறுப்பினர்களுடன் மெக்ரிட்சி ரிசர்வாயர் பகுதிக்கு சென்று பூஜை மற்றும் தியானம் மேற்கொள்ளுதல்.
- 3-Dec-2017 - சென்னை திருவான்மியூரில் சொற்பொழிவு, தியானம் மற்றும் ஹீலிங் நிகழ்ச்சி
- 4-Dec-2017 - மயூர சிம்மஹாசனம் உருவாக்க, மாதிரி வடிவங்களை வழங்குமாறு உறுப்பினர்களுக்கு திரு. ரெஜித் குமார் அறிவுறுத்தல்.
- 17-Dec-2017 - திரு. ரெஜித் குமார் அவர்கள், உறுப்பினர்கள் வழங்கியதில் இருந்து மூன்று மயூர சிம்மஹாசன மாதிரிகளை தேர்வு செய்து, அதனை உருவாக்க (60 அங்குல உயரம், 36 அங்குல அகலம் மற்றும் 30 அங்குல ஆழம்) மறறும் லண்டனுக்கு கொண்டு செல்ல ஆகும் செலவு விவரங்கள் குறித்து விசாரித்து அனுப்புமாறு அறிவுறுத்தல்.
- 23-Dec-2017 - தேர்வு செய்யப்பட மூன்று மாதிரிகளின் படங்களை பழனியில் வைத்து பூஜை.
- 1-Jan-2018 - திரு. ரெஜித் குமார் மற்றும் LMRK குறித்து வேந்தர் டிவி மூன்றாவது கண் நிகழ்ச்சி ஒளிபரப்பு. இது குறித்த காணொளி: Click here to watch!!!
- 31-Jan-2018 - திரு. ரெஜித் குமார் சந்திர கிரகணத்தன்று (அன்று தைப்பூச தினம்) சிறப்பு தியானம்.
- 4-Mar-2018 - திரு. ரெஜித் குமார் சென்னை திருவான்மியூரில் சொற்பொழிவு, தியானம் மற்றும் ஹீலிங் நிகழ்ச்சி. இது குறித்த காணொளி: Click here to watch!!!
- 11-Apr-2018 - திரு. ரெஜித் குமார் ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள லயன் தீவிற்கு சென்று அதன் சிறப்புகளை காலின் ஹேடருடன் சேர்ந்து விளக்கம். இது குறித்த காணொளி: Click here to watch!!!
- 12-Apr-2018 - திரு. ரெஜித் குமார் ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள ப்ளூ மௌண்டைன் சென்று தியானம். இது குறித்த காணொளி: Click here to watch!!!
- 15-Apr-2018 - திரு. ரெஜித் குமார் அவர்கள் சிங்கப்பூர் உறுப்பினர்களுடன் மெக்ரிட்சி ரிசர்வாயர் பகுதிக்கு சென்று பூஜை மற்றும் தியானம் மேற்கொள்ளுதல்.
- 1-May-2018 - திரு. ரெஜித் குமார் ஜப்பான் க்யோடோவில் அமைந்துள்ள பியூஷிமி இனாரி ஆலயத்திற்கு விஜயம். அங்கு மஹாவதார் பாபாஜி குறித்து முக்கிய தகவல் வெளியீடு. இது குறித்த காணொளி: Click here to watch!!!
- 8-July-2018 - திரு. ரெஜித் குமார் அன்னமலை முருகர் ஆலயத்திற்கு சென்று சிறப்பு வழிபாடு, தியானம். இது குறித்த காணொளி: Click here to watch!!!
- 22 to 30-July-2018 - திரு. ரெஜித் குமார் LMRK உறுப்பினர்களுக்கான ஏழு கதிர் தியானம் மேற்கொள்ளுதல்
- 18-August-2018 - திரு. ரெஜித் குமார் சென்னை சென்று LMRK முக்கிய உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்.
- 30-September-2018 - மயூர சிம்மாசன திருவிழா பழனியில் இனிதே நடைபெற்றது. காலையில் ஐவர் மலையில் பூஜை மற்றும் மாலை பழனி மலை கிரிவலம்/பொது நிகழ்ச்சி. இது குறித்த காணொளி: Click here to watch!!!
- 14-November-2018 - மயூர சிம்மாசனம் வேல்சில் அமைந்துள்ள தான்தோன்றி ஆஞ்சநேயர் ஆலயத்தில் பிரதிஷ்டை. இது குறித்த காணொளி: Click here to watch!!!
மேலும் விவரங்கள்:
Website: www.lionmayura.org
Facebook: https://www.facebook.com/lionmayura
Youtube Channel: https://www.youtube.com/c/lionmayuraroyalkingdom/videos
Om Saravanabhavaya Namaha!!